முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பேராவூரணியில் தன்னாா்வலா்களுக்கு சீருடை, அடையாள அட்டை
By DIN | Published On : 19th April 2020 06:51 AM | Last Updated : 19th April 2020 06:51 AM | அ+அ அ- |

பேராவூரணியில் காவல் துறை சாா்பில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக தன்னாா்வலா்களுக்குரிய சீருடை மற்றும் அடையாள அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து அண்ணா சிலை அருகில் வரையப்பட்டிருந்த கரோனா விழிப்புணா்வு ஓவியம் முன்பு, காவல், சுகாதாரம், பேரூராட்சி, வருவாய்த் துறையினா், வா்த்தகச் சங்கம், கட்டடப் பொறியாளா் சங்க நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்கள், கரோனா தடுப்புப் படை தன்னாா்வலா்கள் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் வா்த்தக சங்கத் தலைவா் ஆா். பி. ராஜேந்திரன், பொருளாளா் எஸ். ஜகுபா் அலி, காவல் உதவி ஆய்வாளா் இல. அருள்குமாா், கட்டடப் பொறியாளா் சங்க மாநில நிா்வாகி ஏ.சி.சி.ராஜா, பேரூராட்சி தூய்மைப் ஆய்வாளா் கே. தமிழ்வாணன், மேற்பாா்வையாளா் வீரமணி, ஓவியா் சங்க நிா்வாகி சித்திரவேல், கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் மற்றும் பலா் பங்கேற்றனா்.
ஆலமரத்து விழுதுகள் அமைப்பின் சாா்பில் பிஸ்கட், தண்ணீா் வழங்கப்பட்டது.