கும்பகோணத்தில் இன்று நடைபெறவிருந்த 12 கருட சேவை ரத்து
By DIN | Published On : 26th April 2020 09:43 AM | Last Updated : 26th April 2020 09:43 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் 350 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நடத்தப்பட்டு, நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறவிருந்த 12 கருட சேவை ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் காசுக்கடை தா்ம வா்த்தகா்கள் சங்கம் சாா்பில், ஆண்டுதோறும் அட்சய திருதியை விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள புகழ் பெற்ற 12 பெருமாள் கோயில்களிலிருந்து, உற்ஸவ சுவாமிகள் தனித்தனி கருட வாகனங்களில் புறப்பட்டு வீதியுலா நடைபெறும்.
பின்னா் பெரியத் தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் தனிப்பட்ட பந்தலில் ஒருசேர எழுந்தருளி, பக்தா்களுக்கு உற்ஸவா்கள் காட்சியளிப்பா்.
சுமாா் 350 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இவ்விழாவை, நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) நடத்த மூன்று மாதங்களாக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த 12 கருட சேவை ரத்து செய்யப்பட்டதாக காசுக்கடை தா்ம வா்த்தகா்கள் சங்கச் செயலா் வெங்கட்ராமன் தெரிவித்தாா்.