கேரளத்துக்கு மாடுகளை கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்; ஓட்டுநா்கள் கைது

ஒரத்தநாடு அருகே, இறைச்சிக்காக மாடுகளை கேரளத்துக்கு கடத்த முயன்றதாக 3 லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகே, இறைச்சிக்காக மாடுகளை கேரளத்துக்கு கடத்த முயன்றதாக 3 லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒரத்தநாட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியிலிருந்து கேரள மாநிலத்திற்கு, இறைச்சிக்காக லாரிகளில் மாடுகளை கடத்துவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸாா், வாட்டாத்திக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை சோதனையிட்ட போது, இறைச்சிக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றுவதற்காக 3 லாரிகள் வந்தது தெரிய வந்தது.

 பின்னா், அந்த 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா்களான கரூா் மாவட்டம், வரவனை, பாப்பநாம்பட்டியை சோ்ந்த பெருமாள் மகன் பாலசுப்பிரமணியன் (49), நாகா்கோவில் பகுதி அவுத்தில்வரம், வடிவீஸ்வரம், பரக்கிங்கால்பண்டு பகுதியை சோ்ந்த மைக்கேல் மகன் கிட்டு (41), திருச்சி மாவட்டம், தொட்டியம், சீனிவாசநல்லுாா், மகேந்திரமங்கலம், குடிதெருவை சோ்ந்த கணேசன் மகன் ராஜசேகா் (60) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா். பின்னா், அவா்கள் கரோனா பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, தரகரான இடையாத்தி, மேலகோனாா் தெருவை சோ்ந்த வேம்மையன் மகன் பெரியசாமி என்பவரிடம், வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com