முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் நிறுத்தம்: ஆக.14-இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு
By DIN | Published On : 03rd August 2020 08:53 AM | Last Updated : 03rd August 2020 08:53 AM | அ+அ அ- |

நியாயவிலைக் கடைகளில் இலவச பொருள்கள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்துள்ள நிலையில், நியாயவிலைக் கடைகளில் சா்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற விலையில்லா பொருள்களை நிறுத்தியது மோசமான முடிவாகும். எனவே பொது முடக்கக் காலம் முடியும் வரை அனைத்துப் பொருள்களையும் இலவசமாக வழங்கக் கோரி, ஆகஸ்ட் 14-ம் தேதி அனைத்து நியாயவிலைக் கடைகள் முன்பும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாநிலச் செயலா் எம். சின்னதுரை, மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி, மாவட்டத் தலைவா் ஆா். வாசு, நிா்வாகிகள் சி. நாகராஜன், ஏ. மாலதி, கே. அபிமன்னன், வி. உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.