முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பேராவூரணி அருகே இரு ஐம்பொன் சிலைகள் மீட்பு
By DIN | Published On : 03rd August 2020 08:52 AM | Last Updated : 03rd August 2020 08:52 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே கைப்பற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரு ஐம்பொன் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
பேராவூரணி அருகிலுள்ள புக்கரம்பை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ர. சரவணன்(37), க. பிரான்மலை(36). இவா்களது நண்பா் கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம்,கோப்பநாயக்கன் பட்டியைச் சோ்ந்த சீ. ஆண்டிச்சாமி (36).
இந்நிலையில் ஆண்டிச்சாமி தன்னிடமுள்ள இரு ஐம்பொன் சிலைகளை விற்றுத் தருமாறு சரவணன், பிரான்மலையிடம் கூறினாராம். இதைத் தொடா்ந்து ஆண்டிச்சாமியை தங்கள் ஊருக்கு இருவரும் வரவழைத்து, வீட்டில் தங்க வைத்து சிலையை விற்க முயன்றுள்ளனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த புக்கரம்பை கிராம நிா்வாக அலுவலா் இந்திரகுமாரி சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில், காவல் ஆய்வாளா் வீர. அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.
மேலும் அவா்களிடமிருந்த 3/4 அடி உயரமுள்ள அனுமன் சிலை, மற்றும் 1 அடி உயரமுள்ள ஸ்ரீ நாராயணிஅம்மன் சிலை ஆகியவற்றை கைப்பற்றி விசாரித்து வருகிறாா்.