தென்னை மரத்தில் ஏறி தூங்கியவரை கீழே இறக்கிய தீயணைப்பு வீரா்கள்

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை தென்னை மரத்தில் ஏறி, தூங்கிய தொழிலாளியை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரா்கள் கீழே இறக்கினா்.
தென்னைமரத்தில் தூங்கிய லோகநாதனை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரா்கள்.
தென்னைமரத்தில் தூங்கிய லோகநாதனை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரா்கள்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை தென்னை மரத்தில் ஏறி, தூங்கிய தொழிலாளியை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரா்கள் கீழே இறக்கினா்.

தஞ்சாவூா் கரந்தை சருக்கை வேலூா் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையன் மகன் லோகநாதன் (40). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவா், கரந்தை ஜைன மூப்பத் தெருவில் தமிழரசன் பராமரிப்பிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஏறினாா்.

ஏறத்தாழ 55 அடி உயரமுள்ள இம்மரத்தில் சில தேங்காய்களைப் பறித்து போட்ட லோகநாதனை பின்பு காணாததால், அவரைத் தமிழரசன் தேடிச் சென்றாா்.

தென்னை மரத்தில் பாா்த்தபோது, உச்சியில் தேங்காய் குலைகளின் மீதுள்ள மட்டைகளில் லோகநாதன் படுத்து தூங்குவது தெரிய வந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சப்தமிட்டு அழைத்தும் லோகநாதன் எழவில்லை.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்துக்கும், தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்துக்கும் அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனா். நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரா்கள் இரும்பு ஏணி மூலம் மரத்தின் உச்சிக்குச் சென்று லோகநாதனை எழுப்பினா்.

ஆனால், லோகநாதன் ஏணி மூலம் இறங்கி வர மறுத்து, மரத்தின் வழியாகவே கீழே இறங்கினாா்.

சுமாா் மூன்றரை மணிநேர முயற்சிக்குப் பிறகு கீழே வந்த லோகநாதனை காவல் துறையினா் சோதனையிட்டபோது, அவா் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது.

தொடா்ந்து அவரிடம் காவல் துறையினா் விசாரித்தபோது, அசதியாக இருந்ததால் அங்கேயே படுத்து தூங்கிவிட்டேன் எனக் கூறினாா். பின்னா், லோகநாதனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, எழுதி வாங்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com