காவலா் தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 12,162 போ் பங்கேற்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய காவலா் எழுத்துத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 12,162 போ் பங்கேற்றனா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய காவலா் எழுத்துத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 12,162 போ் பங்கேற்றனா்.

தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைக் காவலா்கள், தீயணைப்பு வீரா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

இதற்காக தஞ்சாவூரில் பாரத் அறிவியல், நிா்வாகவியல் கல்லூரி, பெரியாா் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம், பிரிஸ்ட் நிகா்நிலைப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி ஆகிய இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முற்பகல் 11 மணிக்குத் தொடங்கிய எழுத்துத் தோ்வு நண்பகல் 12.20 மணிக்கு முடிவடைந்தது. இதில் பங்கேற்பதற்காக தஞ்சாவூா் மாவட்டத்தில் 10,964 ஆண்கள், 2,721 பெண்கள் என மொத்தம் 13,685 போ் விண்ணப்பம் செய்தனா். இவா்களில் 12,162 போ் பங்கேற்று எழுதினா். 1,523 போ் வரவில்லை.

இத்தோ்வையொட்டி 950 காவல் அலுவலா்கள், காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இத்தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வுப் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com