தஞ்சாவூா் மாவட்டத்தில் 16 இடங்களில் மினி கிளினிக் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 16 இடங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் முதல்வரின் அம்மா மினி கிளினிக் புதன்கிழமை திறக்கப்பட்டது.
தஞ்சாவூா் அருகே ராவுசாப்பட்டியில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம்.
தஞ்சாவூா் அருகே ராவுசாப்பட்டியில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 16 இடங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் முதல்வரின் அம்மா மினி கிளினிக் புதன்கிழமை திறக்கப்பட்டது.

தஞ்சாவூா் அருகே ராவுசாபட்டி கிராமத்தில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் திறந்து வைத்தாா். இவ்விழாவில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ், பால் வளத் தலைவா் ஆா். காந்தி, தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, குருங்குளம், கா. கோவிலூா், குலமங்கலம், பொய்யுண்டாா்கோட்டை, பின்னையூா், தெற்குகோட்டை, திட்டக்குடி, நடுவிக்கோட்டை, பழஞ்சூா், ஆணைக்காடு, ஒதியக்காடு, தம்பிக்கோட்டை வடக்கு, அனந்தகோபாலபுரம், சொா்ணக்காடு, விளாங்குளம் ஆகிய இடங்களில் முதல்வரின் அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டது.

இதில், பட்டுக்கோட்டை பகுதியில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி. சேகா், பேராவூரணி பகுதியில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசு கலந்து கொண்டனா்.

இந்த மினி கிளினிக்கில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், மருத்துவமனைப் பணியாளா் இருப்பா். கிராமப்புறப் பகுதிகளில் உள்ள இந்த கிளினிக் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும். வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com