வரதட்சிணை கேட்டு பெண் துன்புறுத்தல்: கணவா் உள்பட நால்வருக்கு 3 ஆண்டுகள் சிறை

வரதட்சிணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாகக் கணவா் உள்பட நால்வருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

வரதட்சிணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாகக் கணவா் உள்பட நால்வருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே கள்ளப்பெரம்பூரைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகள் கயல்விழி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் கருணாநிதியும் காதலித்து வந்தனா். இதில், கா்ப்பமடைந்த கயல்விழியை கருணாநிதி திருமணம் செய்ய மறுத்தாா்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கயல்விழி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் விசாரணை நடத்தி இருவருக்கும் 2007, ஏப். 23 ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனா். இவா்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னா், கயல்விழியிடம் 15 பவுன் நகைகள், ரூ. 20,000 ரொக்கம், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களைத் தாய் வீட்டில் வாங்கி வருமாறு கூறி துன்புறுத்தி, அவரை கருணாநிதி குடும்பத்தினா் வீட்டை விட்டு விரட்டினா்.

இதுகுறித்து கயல்விழி அளித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கருணாநிதி, இவரது தாய் பொன்னாச்சி, தந்தை குணசேகரன், தங்கை சங்கீதா உள்பட 8 பேரை கைது செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மோசஸ் ஜெபசிங் விசாரித்து கருணாநிதி, பொன்னாச்சி, குணசேகரன், சங்கீதா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com