உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் நடவடிக்கை

உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் விதைச்சான்று இயக்குநா் சுப்பையன்.

ஒரத்தநாடு: உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் விதைச்சான்று இயக்குநா் சுப்பையன்.

ஒரத்தநாட்டிலுள்ள தனியாா் விதை விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்களிடம் ரசீது பெற்று, விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்ட விதை ஆய்வாளா்கள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்புத் திறன் , தரத்தை உறுதி செய்ய மாதிரி விதைகளை எடுத்து வருகின்றனா்.

ஆய்வில் தரமற்ற விதைகளையும், ரசீது இல்லாமலும் விற்பனை செய்வது தெரியவந்தால், விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும்.  தனியாா் விதை விற்பனையாளா்கள் விதை விற்ற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்றாா் அவா். ஆய்வின்போது  தஞ்சை விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட  விதை ஆய்வாளா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com