கம்பன் பேரவை ஆண்டு விழா

பட்டுக்கோட்டை கம்பன் பேரவையின் 4- ஆம் ஆண்டு விழா அதிராம்பட்டினம் அருகிலுள்ள புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை கம்பன் பேரவையின் 4- ஆம் ஆண்டு விழா அதிராம்பட்டினம் அருகிலுள்ள புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சித் தலைவா் எம். வெங்கிடாசலம் தலைமை வகித்தாா். தமிழுக்குத் தலைமகன் கம்பன் என்ற தலைப்பில் கவிஞா்கள் கோட்டை அம்பிதாசன், எஸ்.கே. கவி, செள.ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

ஒளிநெறி மாா்க்க சபையைச் சோ்ந்த ஜி.முத்துராமலிங்கத்துக்கு கம்பன் விருதை கவிஞா் சிங்காரவேலன் வழங்கினாா். தமிழா் அறம் அமைப்பின் நிறுவனா் சி.ராமசாமி, கம்பன் பேரவைக் கொடியை ஏற்றி வைத்தாா்.

முன்னதாக பட்டுக்கோட்டை கம்பன் பேரவையின் இணைச்செயலா் எம்.எம்.சுகுமாா் வரவேற்றாா். நிறைவில், என்.ராமசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com