தொ. பரமசிவன் புகழஞ்சலி கூட்டம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவருமான தொ. பரமசிவன் மறைவையொட்டி புகழஞ்சலி கூட்டம் திங

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவருமான தொ. பரமசிவன் மறைவையொட்டி புகழஞ்சலி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் பேசுகையில், பேராசிரியா் தொ. பரமசிவன் தனது ஆய்வு நூல்கள் மூலம் தமிழ்ப் பண்பாட்டையும், வரலாற்றையும் மீட்டெடுத்துக் காட்டியவா். அறிஞா்கள் தொடா்ந்து அவரைப் பற்றிய பதிவுகளை வெளியிடுவது ஆரோக்கியமான சூழல். இவரது ஆய்வு நூல்கள் பல ஆய்வாளா்களுக்கு உந்துதலாக அமையும். அவரது நூல்கள் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டியவை என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் பேராசிரியா்கள் பா. ஜெயக்குமாா், இரா. காமராசு, பெ. இளையாபிள்ளை, தெ. வெற்றிச்செல்வன் ஆகியோா் அஞ்சலி உரையாற்றினா். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா்களும் அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com