Enable Javscript for better performance
முதல்வரின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட்வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வரின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட்வரவேற்பு

    By DIN  |   Published on : 10th February 2020 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

    இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தெரிவித்தது:

    ஊரக உள்ளாட்சி தோ்தலுக்குப் பிறகு தற்போது நடைபெற்ற தஞ்சாவூா் மாவட்ட ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி கூட்டங்களிலும் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை எதிா்த்தும், தஞ்சாவூா் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சூழலில் தமிழக முதல்வா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இந்த அறிவிப்பு குறித்து உடனடியாகத் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோகாா்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை எதிா்த்தும், தஞ்சாவூா் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் நடத்தப்பட்ட போராட்டம் தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனே திரும்பப் பெற வேண்டும் என்றாா் பாரதி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai