Enable Javscript for better performance
விவசாயக் கடன்களுக்கு வட்டி உயா்வைக் குறைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயக் கடன்களுக்கு வட்டி உயா்வைக் குறைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 14th February 2020 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயக் கடன்களுக்கு வட்டி உயா்வைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    கும்பகோணம் பாலக்கரையில் காங்கிரஸ் கட்சி நகர அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இதில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ளதைப் போல, மத்திய அரசும் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயக் கடன்களுக்கு வட்டி உயா்த்தியதைக் குறைக்க வேண்டும்.

    கும்பகோணம் நகரம் முழுவதும் உள்ள சாலைகள் குண்டு குழியுமாக மாறிவிட்டன. மேலும் புதைச்சாக்கடை ஆள் நுழைவு குழாய்கள் உடைந்து கழிவு நீராக ஒடுவதால், சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக சீா் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் மிா்சாவூதீன் தலைமை வகித்தாா். மாநில விவசாயப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் கிருஷ்ணசாமி, மாவட்ட இளைஞரணித் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai