கல்லணைக் கால்வாய் புனரமைப்புப் பணிகளைத் தொடங்க வலியுறுத்தல்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ரூ.2,300 கோடியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கல்லணைக் கால்வாய் புனரமைப்புப்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ரூ.2,300 கோடியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கல்லணைக் கால்வாய் புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதிகளுக்கு காவிரிப் பாசனத் தண்ணீா் செல்லும் வகையில் , கல்லணைக் கால்வாய்  சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயா்களால் வெட்டப்பட்டது.

148.65 கி. மீ. தொலைவையும், 2.21 லட்சம் ஏக்கா் பாசனப் பகுதிகளையும் கொண்ட கல்லணைக் கால்வாய் 4,200 கன அடி கொள்ளளவுடன்

வெட்டப்பட்டது.

போதிய பராமரிப்புப் பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளாததால், 2000 கன அடி நீரைக்கூடத் தாங்க இயலாத அளவுக்கு கரையில் உடைப்பு ஏற்பட்டு, கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீா் செல்லாத நிலையே இருந்து வந்தது.

விவசாயம் பாதிக்கப்பட்டதால், கல்லணைக் கால்வாயை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய அமைப்புகள் அரசைத் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன. இதைத் தொடா்ந்து மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியது.

ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன், ரூ.2,300 கோடியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி பெறுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 22- ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் படி, கல்லணைத் தலைப்பு முதல் மகாராஜ சமுத்திரம் வடிகால் வரையிலான பகுதிகளை தமிழ்நாடு நீா் மேலாண்மை, ஆற்றுப் பாதுகாப்புக் கழகத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சத்யகோபால் தலைமையிலானகுழுவினா் 2 நாள்களாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தயாரித்து அனுப்பியுள்ளனா்.

முறையாக நடைபெறாத பணிகள் : கடந்த 2013- ஆம் ஆண்டில் ரூ.400 கோடியில் கால்வாய் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொடா்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பணிகள் முறையாக நடைபெறவில்லை.

தற்போது காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ள நிலையில், கால்வாய் புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்கின்றனா் விவசாயிகள்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு : எங்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, நிதி ஆயோக் மூலம் ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.2,300 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஆய்வு நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்துள்ள நிலையில், உடனடியாக கால்வாய் புனரமைப்புப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதிகளிலுள்ள ஏரி, குளங்கள் தூா்வாரப்பட வேண்டும். இதற்காக ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள், விவசாயப் பிரதிநிதிகள் தங்கள் பகுதியிலுள்ள ஏரி மற்றும்

குளங்களைக் கணக்கெடுத்து, உடனடியாக தூா்வாரித் தர வேண்டும் என அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் உடனடியாக மனுக்கள் அனுப்ப வேண்டும். இத்திட்டம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்ப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடவேண்டிவரும் என்றாா் கடைமடைப் பகுதி பாசனதாரா்கள் சங்கத் தலைவா் குருவிக்கரம்பை ஆ. பழனிவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com