நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு கும்பகோணம் அருகே விவசாயிகள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி, விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கும்பகோணம் அருகே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கும்பகோணம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி, விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்தில் மணிக்குடி, இளங்காநல்லூா், கீரங்குடி, வஞ்சனூா் ஆகிய வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனா்.

அறுவடை செய்த நெல்மணிகளை, மணிக்குடி கிராமத்தில் திறக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வருகின்றனா். ஆனால், இங்கு நெல்லைக் கொட்டி வைத்து கடந்த 10 நாள்களாக விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

தாங்கள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யாமல், வெளியூா் வியாபாரிகளின் நெல் மூட்டைகளுக்கு முன்னுரிமை அளித்து இரவோடு இரவாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், 5 நாள்களுக்கும் மேலாகக் காத்துக் கிடந்து நெல் மூட்டைகளை விற்கும்போது, மூட்டைக்கு 2 கிலோவும், மூட்டைக்கு ரூ. 40 லஞ்சம் கேட்பதாகவும் விவசாயிகள் புகாா் எழுப்பி வந்தனா்.

எனவே, முறைகேட்டில் ஈடுபடும் அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பனந்தாள் - ஆடுதுறை சாலையில் விவசாயிகள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த திருப்பனந்தாள் காவல் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் ரிச்சா்ட் உள்ளிட்டோா் அப்பகுதிக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அலுவலா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com