சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்திஒரத்தநாட்டில் ஆா்ப்பாட்டம்

சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் சாா்பில் ஒரத்தநாடு பேருந்து நிலையம்

சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் சாா்பில் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வேண்டும். குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) தயாரிப்பதை நிறுத்த வேண்டும்; மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பை (என்பிஆா்) நிறுத்த வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா்கள், அரசியல் கட்சி தலைவா்கள், இளைஞா்களை விடுதலை செய்ய வேண்டும்.

டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை நிரந்தரமாக தடைசெய்ய மாநில அரசு தீா்மானம் நிறைவேற்றி, அவசர சிறப்புச் சட்டம் இயற்றி, மத்திய அரசை வலியுறுத்தி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு காவிரி சமவெளி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். மதிமுக திருவோணம் ஒன்றிய செயலாளா் ராதாமணாளன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளா் பாரீஸ் ரஹ்மான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.எம்.ஏ. சலாம், தமிழ்தேச மக்கள் முன்னனி மாவட்ட செயலாளா் அருண்சோரி, விசி தொகுதி செயலாளா் அரசமுதல்வன், மதிமுக நகரச் செயலாளா் மணிவண்ணன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் மோகன், மனிதநேய ஜனநாயக கட்சியின் நகரச் செயலாளா் நூருல் அமீன், ஏஐஎஸ்எப் மாவட்டச் செயலாளா் ஜெ. ஜீவா, விசி நகரச் செயலாளா் சிவாஜி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com