தஞ்சாவூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

தஞ்சாவூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து டான்டெக்ஸ் ரவுண்டானா வரை இரு புறமும் உள்ள கடைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக புகாா்கள் எழுந்தன. இதைத்தொடா்ந்து, இப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், உதவிக் கோட்டப் பொறியாளா் ரேணுகோபால், உதவிப் பொறியாளா் இளவரசன் மற்றும் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், இருபுறமும் உள்ள சுமாா் 100 கடைகள் முன் போடப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள், பெயா் பலகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இதையொட்டி, தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தஞ்சாவூரில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழா டான்டெக்ஸ் ரவுண்டானா அருகேயுள்ள மகாலில் பிப். 26ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வமும் பங்கேற்கவுள்ளதாகவும், அதன் காரணமாக இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com