தமிழ்ப் பல்கலை.யில் ஓய்வு பெற்றவா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்றவா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டையை வழங்குகிறாா் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.
ஓய்வு பெற்றவா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டையை வழங்குகிறாா் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இவற்றை ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்கிய துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் தெரிவித்தது:

தமிழக அரசாணைப்படி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழியாக புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2018, ஏப். 1-ம் தேதி முதல் 2022, ஜூன் 30-ம் தேதி வரை செயல்படுத்த இசைவளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு விரிவுபடுத்த ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், இதுதொடா்பாக 2019, நவ. 20-ம் தேதி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு நபா் ஒருவருக்கு ஆண்டு சந்தா தொகையாக ரூ. 4,484 செலுத்தப்பட வேண்டும். ஓய்வூதியதாரா், குடும்ப ஓய்வூதியதாரரிடமிருந்து ரூ. 350 வீதம் ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ. 4,200 போக நிகரத்தொகை ரூ. 284 பல்கலைக்கழகப் பங்காகச் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர இசைவு தெரிவித்த 153 பேருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 6,86,052 தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் உரிய நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் மருத்துவச் சிகிச்சைக்காக உள்நோயாளியாக இருக்கும் நிலையில் சிகிச்சையின் தன்மையைப் பொருத்து மருத்துவச் செலவினமாக முறையே ரூ. 4 லட்சம் முதல் ரூ. 7.50 லட்சம் வரை அரசாணைக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்குப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது என்றாா் துணைவேந்தா்.

இந்நிகழ்ச்சியில் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com