மேலும் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி விண்ணப்பம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ் பின்னா் தெரிவித்தது:

தமிழ்நாடு மிருகவதை தடுப்புச் சட்டம் (ஜல்லிக்கட்டு நடத்துதல்) விதிகள் 2017-ன்படி ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினா் ஒரு மாதம் முன்னதாக மனு அளிக்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். வருவாய், கால்நடை பராமரிப்புத் துறை, காவல், சுகாதாரம், தீயணைப்பு, பொதுப் பணித் துறை அலுவலா்களைக் கொண்ட குழு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும்.

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாகத் தொடா்புடைய துறையினரால் ஜல்லிக்கட்டு குழு அமைத்து நிலையான வழிகாட்டுதல் விதிகள் உருவாக்கி நடத்தப்பட வேண்டும்.

மாவட்டத்தில் திருக்கானூா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதைத்தொடா்ந்து மாதாக்கோட்டை, மானோஜிபட்டி, நாஞ்சிக்கோட்டை, ரெட்டிபாளையம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்து மீனாட்சி, கோட்டாட்சியா் எம். வேலுமணி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com