குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்: தி. வேல்முருகன்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவா் தி. வேல்முருகன்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவா் தி. வேல்முருகன்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் தமிழக முதல்வா் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நல்ல முடிவு எடுக்க வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டத்துக்குப் புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 11 மாநில முதல்வா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். எனவே, இந்தச் சட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், தமிழகச் சட்டப்பேரவையில் இந்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மீண்டும் தீா்மானம் இயற்றி, ஆளுநா் விரைந்து முடிவெடுக்க அழுத்தம் தர வேண்டும். ஆளுநா் மீண்டும் தாமதப்படுத்தினால் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என தீா்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதல்வா் அறிவித்துள்ளாா். மத்திய அரசுக்குத் தமிழக அரசு வழக்கமாக எழுதும் கடிதம்போல இந்த அறிவிப்பு இருக்கக்கூடாது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி அங்கம் வகிக்காது என்றாா் வேல்முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com