பாபநாசம் சிவன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை அருள்மிகு பாலைவனநாதா் கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை அருள்மிகு பாலைவனநாதா் கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள மூலவா் பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயிலில் உள்ள இரட்டை பைரவா்களுக்கு பால், தேன் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தூப, தீப,நெய்வேத்ய வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இதேபோல், திருப்பாலைத்துறை கற்பக விநாயகா், வீரபத்திரா், பிராமி, வைஷ்ணவி, கெளமாரி, மகேஸ்வரி, இந்திராணி, வராகி, சாமுண்டி உள்ளிட்ட சப்த மாதாக்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சப்தமாதாக்கள் கோயிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, பழங்கள், கிழங்கு வகைகள், பொங்கல்,இனிப்புகள் வைத்து,நெய் விளக்கேற்றி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com