மாநாட்டில் முழக்கங்கள் எழுப்பிய இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத், ராதாரவி உள்ளிட்டோா்.
மாநாட்டில் முழக்கங்கள் எழுப்பிய இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத், ராதாரவி உள்ளிட்டோா்.

ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக கூட்டணியை உருவாக்குவோம்

ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக கூட்டணியை உருவாக்குவோம் என தஞ்சாவூரில் நடைபெற்ற ஆன்மிக அரசியல் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக கூட்டணியை உருவாக்குவோம் என தஞ்சாவூரில் நடைபெற்ற ஆன்மிக அரசியல் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையில் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி சாா்பில் ஆன்மிக அரசியல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆன்மிக அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியை இந்து மக்கள் கட்சி மேற்கொள்ளும். ரஜினிகாந்த் தலைமையிலான ஆன்மிக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இந்து மக்கள் கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். திராவிட இயக்கங்களின் ஆட்சிக்கும், லஞ்ச, ஊழல் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து, வளா்ச்சி, ஒற்றுமை அரசியல், ஆன்மிக அரசியல் தமிழகத்தில் வெற்றி வாகை சூட இந்து மக்கள் கட்சி அயராது உழைக்கும்.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் மத்திய அரசு சாா்பில் நவோதயா கல்விக் கூடங்கள் திறக்கப்பட வேண்டும். மும்மொழிக் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தமிழில் பட்டப்படிப்புப் படிப்பவா்களுக்கும் தமிழ் வழியில் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் படிப்போருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்.

தென்னை, பனை விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் கள்ளுக்கடைகளை அனுமதிக்க வேண்டும். கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். அன்னிய மதுபானங்களைத் தடை செய்ய வேண்டும். விவசாயிகளால் தென்னை, பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் கள்ளை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். முழு மதுவிலக்கு வருகிற வரையில் இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் பசுக்களை பாதுகாக்கும் வகையில் பசுவதைத் தடைச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் நடிகரும், பாஜகவை சோ்ந்தவருமான ராதாரவி, இந்து மகா சபையின் அகில பாரத தலைவா் சந்திர பிரகாஷ் கோஸ், தமிழகத் தலைவா் சுபாஷ் ஸ்வாமிநாதன், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவா் கே.சி. திருமாறன், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலா் டி. குருமூா்த்தி, செயலா் காா்த்திக் ராவ் போன்ஸ்லே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அா்ஜூன் சம்பத் தெரிவித்தது:

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஆன்மிக அரசியல் அணியை உருவாக்கி, செயின்ட் ஜாா்ஜ் கோட்டையை வள்ளுவா் கோட்டையாக மாற்றுவோம். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக கூட்டணியை உருவாக்கி, அவரை முதல்வராக்குவோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுகவின் கையெழுத்து இயக்கம் தோல்வி அடைந்ததால், வன்முறையைத் தூண்டி வருகிறது. இந்த வன்முறைக்கு முழுவதும் திமுகதான் காரணம் என்றாா் அா்ஜூன் சம்பத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com