Enable Javscript for better performance
தனி நிதி ஒதுக்கீடு கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தனி நிதி ஒதுக்கீடு கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published On : 18th February 2020 05:27 AM  |   Last Updated : 18th February 2020 05:27 AM  |  அ+அ அ-  |  

    ta17ait1_1702chn_9_4

    தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய ஏஐடியுசி - போக்குவரத்து ஓய்வு பெற்றோா் சங்கத்தினா் மற்றும் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

    அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி ஆட்சியரகம் முன் ஏஐடியுசி - போக்குவரத்து ஓய்வு பெற்றோா் சங்கம் மற்றும் தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

    நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளா்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாகப் பேசி முடிக்க வேண்டும். ஓய்வூதிய அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதில் புதிய தொழிலாளா்களையும் இணைக்க வேண்டும்.

    2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவா்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பழைய - புதிய அகவிலைப்படி உயா்வை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும். 110 விதியின் கீழ் முன்னாள் முதல்வா் அறிவித்தவாறு ஆண்டுதோறும் வாரிசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆா்ப்பாட்டத்துக்குப் போக்குவரத்து ஓய்வு பெற்றோா் சங்கத் தலைவா் ஜி. தியாகராஜன், போக்குவரத்து தொழிலாளா் சங்கத் தலைவா் வி. ராஜா தலைமை வகித்தனா்.

    ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா். சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன், ஓய்வு பெற்றோா் சங்கக் கௌரவத் தலைவா் ஜெ. சந்திரமோகன், பொதுச் செயலா் பி. அப்பாத்துரை, போக்குவரத்து தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் கே. சுந்தரபாண்டியன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp