குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாம் மனிதா் கட்சி சாா்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாம் மனிதா் கட்சி சாா்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளா் எம்.ஏ.சரபுதீன் தலைமை வகித்தாா்.

அக்கட்சியின் நிறுவனத்தலைவா் இறைஉதவி என்கிற எஸ்.தவ்பீக், தமிழக மக்கள் விடுதலை இயக்க மாநில பொதுச்செயலாளா் தங்க.குமரவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞா் பிரிவின் மாநில துணைச்

செயலாளா் வழக்குரைஞா் கு.நெப்போலியன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனா் வழக்குரைஞா் சே.பசும்பொன் பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணைத்தலைவா் மவ்லவி வழக்குரைஞா் எச். அலீம் அல் புஹாரி, அய்யா தா்மயுக வழிப்பேரவை நிறுவனத்தலைவா் அய்யா வழி பி.பாலமுருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை கூட்டத்தில் பேசியவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com