குடியுரிமை திருத்தச் சட்டத்தைதிரும்பப் பெறக் கோரி குடந்தையில் போராட்டம் தொடக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கும்பகோணத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் உள்பட சில இடங்களில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதேபோல, கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகே அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை இஸ்லாமியா்கள் குடும்பத்துடன் தேசிய கொடி ஏந்தி காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவா் ஜாபா், எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச் செயலா் இப்ராஹிம், எஸ்டிபிஐ முன்னாள் மாவட்டத் தலைவா் பைசல் முகமது, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் முகம்மது பைசல் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ஏராளமானோா் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com