தஞ்சாவூருக்கு இன்றுமுதல்வா், துணை முதல்வா் வருகை

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள திருமண விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வருகின்றனா்.

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள திருமண விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் வருகின்றனா்.

தஞ்சாவூா் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகேயுள்ள மகாராஜா திருமண மஹாலில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம் மகன் திருமண விழா புதன்கிழமை (பிப்.26) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

இதற்காக தமிழக முதல்வா் சேலத்திலிருந்து புதன்கிழமை காலை 6 மணியளவில் காரில் புறப்பட்டு திருச்சிக்கு வருகிறாா். திருச்சியில் காலை உணவை முடித்த பிறகு தஞ்சாவூருக்கு 9 மணியளவில் புறப்படுகிறாா். தஞ்சாவூா் மாவட்ட எல்லையான புதுக்குடியில் முதல்வருக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பு அளிக்கின்றனா்.

பின்னா், திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா். இதையடுத்து, திருமண மஹாலிலிருந்து பிற்பகலில் திருச்சிக்கு சென்று, மதிய உணவு முடித்த பிறகு மாலை 4 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறாா். இதேபோல, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வமும் வருகிறாா்.

இதையொட்டி, தஞ்சாவூா் மாநகா், புகரில் ஏறத்தாழ 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். முதல்வா் வந்து செல்லும் வழி நெடுகிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com