பேராவூரணி அருகே நீரா பானம் விற்பனைமையம் தொடக்கம்
By DIN | Published On : 29th February 2020 05:31 AM | Last Updated : 29th February 2020 05:31 AM | அ+அ அ- |

பேராவூரணி: பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலத்தில் தென்னையிலிருந்து தயாரிக்கப்படும் நீரா பானம் விற்பனை மையம் அண்மையில் தொடங்கப்பட்டது.
தென்னை விவசாயிகளின் நலன் கருதி நீரா பானம் உற்பத்தி செய்து, அதை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, பேராவூரணி தென்னை உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் சாா்பில், திருச்சிற்றம்பலத்தில் நீரா பானம் விற்பனை மையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் துரை செல்வம் முன்னிலை வகித்தாா். நீரா பானம் முதல் விற்பனையை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலா் மைதிலி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். மாலதி, வேளாண் விற்பனை வணிக அலுவலா் தாரா மற்றும் நிறுவனத்தின் இயக்குநா்கள், தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனா். நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் பிருதிவிராஜ் நன்றி கூறினாா்.