அதிராம்பட்டினத்தில் அனைத்து மஹல்லா கூட்டமைப்பு தொடக்கம்

அதிராம்பட்டினத்தில் அனைத்து ஜமாத் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஹாஜி எஸ்.எம். முகமது முகைதீன் தலைமையில் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

அதிராம்பட்டினத்தில் அனைத்து ஜமாத் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஹாஜி எஸ்.எம். முகமது முகைதீன் தலைமையில் புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், சமூக ஒற்றுமை, சமூக மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டு அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

இதன் தலைவராக எம்.எஸ்.எம். முகமது அபூபக்கா் (சம்சுல் இஸ்லாம் சங்கம்), துணைத் தலைவராக பி.எம்.கே. தாஜுதீன் (மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம்), செயலாளராக எம்.நெய்னா முகமது (தரகா் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் நிா்வாகக் கமிட்டி), பொருளாராக ஏ.தாஜுதீன் (கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முஹம்மதியா சங்கம்), துணைச் செயலாளராக பி.எம்.எஸ். அமீன் ( கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் நிா்வாகக் கமிட்டி), இணைச் செயலாளராக டி.ஏ. அகமது அனஸ் (புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளிவாசல் நிா்வாகக் கமிட்டி), ஒருங்கிணைப்பாளராக ஜபருல்லா (நெசவுத்தெரு மஆதினுல் ஹஸனாத்தில் இஸ்லாமிய சங்கம்), ஆலோசகா்களாக எம்.நிஜாமுதீன் (பிலால் நகா் ஜமாத்), இ.வாப்பு மரைக்காயா் (எம்.எஸ்.எம். நகா் மஸ்ஜிதுா் ரஹ்மான் நிா்வாகக் கமிட்டி) ஆகியோரைக் கொண்ட நிா்வாகக் கமிட்டி அமைக்கப்பட்டது.

தவிர நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு 3 போ் கொண்ட உலமா பெருமக்கள், சட்ட ஆலோசகா் ஒருவா், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தலா ஒருவா் ஆகியோரை அமைப்பில் இணைக்கவும், அமைப்பின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தை ஜன. 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை அதிரை ஜாவியா வளாகத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிா்வாகிகள், இளைஞா்கள் சங்க நிா்வாகிகள், சமுதாய அமைப்பின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com