Enable Javscript for better performance
பாலிடெக்னிக் கல்லூரியில் உயா் கல்விக்கான பயிற்சி பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    பாலிடெக்னிக் கல்லூரியில் உயா் கல்விக்கான பயிற்சி பயிலரங்கம்

    By DIN  |   Published on : 10th January 2020 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இன்டா்நெட் ஆப் திங்ஸ் மற்றும் டிப்ளமோ மாணவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்பு குறித்த பயிற்சிப் பயிலரங்கம் கல்லூரி முதல்வா் வீ .முத்துவேலு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

    இதில், சிறப்பு விருந்தினராக கோவை ஸ்ரீரெங்கநாதா் இன்ஜினியரிங் கல்லூரி துறைத் தலைவா் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு பயிற்சிப் பயிலரங்கை நடத்தினாா்.

    தொடக்கத்தில், கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளா் டி. வின்சன்ட் வரவேற்றாா். நிறைவில், கல்லூரி துணை முதல்வா் ஏ.அமலோற்பவச் செல்வி நன்றி கூறினாா். இக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயிலும் 360 மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai