Enable Javscript for better performance
குழந்தைகள் இல்ல மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் இல்ல மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 13th January 2020 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-ta12spo4_1201chn_9

    விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ். உடன், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் ப. சுதா உள்ளிட்டோா்.

    தஞ்சாவூரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லங்களிலுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன.

    சமூகப் பாதுகாப்புத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில்

    திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூா், அரியலூா், திருவாரூா், நாகை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லத்தைச் சோ்ந்த 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    இதில், 14 வயதுக்கு மேற்பட்டவா்களுக்குத் தனித்தனியாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. 100 மீ., 200மீ., 400 மீ. ஓட்டப்பந்தயம், 400 மீ. தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பூப்பந்து, கைப்பந்து, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ், வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

    மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா. நடராசன், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் ப. சுதா, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினரும், குழந்தைகள் நலக் குழுத் தலைவருமான சி. திலகவதி, மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) க. பாபு, குழந்தைகள் இல்லக் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai