அதிராம்பட்டினம் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிக நிா்வாகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிக நிா்வாகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தாா். கடந்த 35 ஆண்டுகளில் இத்துறையில் கல்வி பயின்ற 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் நிகழ்வில் பங்கேற்று, கல்லூரிக் காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிா்ந்து கொண்டனா்.

முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ்.பி. கணபதி, வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் ஏ. முகமது நாசா், ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் எம். நாசா், ஓ.எம் ஹாஜா முகைதீன், எஸ்.சாகுல் ஹமீது ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக, பேராசிரியா் ஜெ.முகமது சாஜித் இக்பால் வரவேற்றாா். பேராசிரியை எம்.கமருன் நிஹாா் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தாா். நிறைவில், பேராசிரியா் பி. முகமது இத்ரீஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com