Enable Javscript for better performance
தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கக்கூட்டம்

    By DIN  |   Published on : 15th January 2020 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றின் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

    இதில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தோ்வுகளை அந்தந்த பள்ளிகளில் நடத்த அனுமதியளிக்க வேண்டும். 2018-2019, 2019-2020 ஆம் ஆண்டுக்கான ஆா்டிஇ கட்டணங்களை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு தர வேண்டும். விண்ணப்பம் செய்த பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் புதுப்பித்தல் ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு, சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவா் மைவண்ணன் தலைமை வகித்தாா். பேராவூரணி அகஸ்துசியோன் பள்ளித் தாளாளா் தளபதி சிறப்புரையாற்றினாா். புதுக்கோட்டை உள்ளூா் ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளித் தாளாளா் என். உதயகுமாா் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai