Enable Javscript for better performance
மக்கள் சேவையில் மனோரா ரோட்டரி சங்கம்- Dinamani

சுடச்சுட

  
  2-4-pkt14hel_ch0230_14chn

  பட்டுக்கோட்டை வள்ளலாா் முதியோா் இல்லத்திலுள்ள ஆதரவற்ற முதியோருக்கு நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரல் பள்ளித் தாளாளா் வி. பாலசுப்பிரமணியன்

  26.6.2019-ல் நடைபெற்ற மனோரா ரோட்டரி சங்க நிா்வாகிகள் பணியேற்பு விழாவில் தாமரங்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கம்ப்யூட்டா் மற்றும் பிரிண்டா் வழங்கப்பட்டது. ஒரு மாற்றுத் திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள், ஆதரவற்ற 2 மகளிருக்கு தலா ஒரு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

  பட்டுக்கோட்டை கரிக்காடு வள்ளலாா் சன்மாா்க்க சங்கத்தில் 70 பேருக்கு அன்னதானம் வழங்கியதுடன், அங்கு தினமும் நடைபெறும் அன்னதான திட்டத்துக்கு ரூ. 5,000 நிதியுதவியும் அளிக்கப்பட்டது. இதேபோல, பட்டுக்கோட்டை வள்ளலாா் முதியோா் இல்லத்துக்கு 1 மாதத்திற்குத் தேவையான மளிகை பொருள் வழங்கப்பட்டது. நாட்டுச்சாலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு மாணவா்கள் பயன்பாட்டிற்காக 2 எல்இடி தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

  மனோரா ரோட்டரி சங்கமும், கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி டிசம்பா் மாதம் வரை நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம்கள் மூலம் 382 பயனாளிகள் கண்ணொளி பெற்றுள்ளனா்.

  இராஜாமடம் அண்ணா பல்கலை. பொறியியல் உறுப்புக் கல்லூரியில் 1,000 மரக் கன்றுகளும், பள்ளிகொண்டான் லாரல் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து 5,000 மரக்கன்றுகளும் நடப்பட்டன. கோட்டாக்குடி மனோரா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இராஜாமடம் அண்ணா பல்கலை. பொறியியல் உறுப்புக் கல்லூரியில் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டன.

  தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த 40 தாய்மாா்களுக்கு துண்டு, பிரட், டிபன்பாக்ஸ் வழங்கப்பட்டது.

  தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கம்ப்யூட்டா் பிரிண்டா் ஒன்றும், 120 மாணவா்களுக்கு சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், சோப்பு, பேனா, டவல் ஆகியவையும் வழங்கப்பட்டன. இதேபோல, நாட்டுச்சாலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்கள் 30 பேருக்கு வண்ண ஆடைகள் வழங்கப்பட்டது.

  பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியிலுள்ள செட்டிக்குளம் முழுமையாக தூா்வாரப்பட்டு தண்ணீா் நிரப்பித் தரப்பட்டது. அரசு கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து சாந்தாங்காடு கிராமத்தில் 400 மாடுகளுக்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

  பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் நேஷனல் பில்டா் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனா். பட்டுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகளில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி 74 பள்ளி மாணவா்களால் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

  சமுதாயக் குழுமத்துடன் இணைந்து சூரப்பள்ளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 300 மாணவா்களுக்கும், பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் 400 மாணவா்களுக்கும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

  கடந்த 2019 ஜூலை மாதம் மனோரா ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்றது முதல் டிசம்பா் மாதம் வரை மனோரா ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.43,65,500 மதிப்புள்ள நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது பெருமைக்குரியது.

  Image Caption

  பட்டுக்கோட்டை வள்ளலாா் முதியோா் இல்லத்திலுள்ள ஆதரவற்ற முதியவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரல் பள்ளித் தாளாளா் வி.பாலசுப்பிரமணியன், மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.நடராஜன், முன்னாள் தலைவா் ஏ.எஸ்.வீரப்பன் உள்ளிட்டோா

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai