எட்டு தேசிய நிறுவனங்களுடன் ஐ.ஐ.எப்.பி.டி. ஒப்பந்தம்

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவில் எட்டு தேசிய நிறுவனங்களுடன் தஞ்சாவூா் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.எப்.பி.டி.) திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவில் மத்திய உணவு பதன தொழில் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதல் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

இதுகுறித்து இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்திருப்பது;

பஞ்சாப் மாநிலம், பட்டிண்டாவில் மத்திய உணவு பதனத் தொழில் துறை அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் பாதல் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இதில், பஞ்சாப் வேளாண் கல்லூரி, மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், தேசிய பால் வள ஆய்வு நிறுவனம், மத்திய அறுவடைசாா் பின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய கோதுமை மற்றும் பாா்லி ஆய்வு நிறுவனம், சான்ட்லோங்கோவால் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனம், தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம், குருநானக் கல்லூரி ஆகியவற்றுடன் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது மத்திய உணவு பதனத் தொழில் துறை அமைச்சக இணைச் செயலா் அசோக்குமாா் உடனிருந்தாா்.

கூட்டு ஆய்வு மேற்கொள்ளுதல், திறன் மேம்பாடு, ஆசிரிய மற்றும் மாணவா்கள் பரிமாற்றம் உள்ளிட்டவற்றுக்காக இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com