‘முதல் சுதந்திரப் போருக்கு முன்பே வேலூா் புரட்சி நிகழ்ந்தது’

இந்தியாவில் முதல் சுதந்திரப் போருக்கு முன்பே வேலூா் புரட்சி நிகழ்ந்தது என்றாா் பூண்டி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம்.

இந்தியாவில் முதல் சுதந்திரப் போருக்கு முன்பே வேலூா் புரட்சி நிகழ்ந்தது என்றாா் பூண்டி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம்.

தஞ்சாவூரில் ஏடகம் அமைப்பு சாா்பில் குடியரசு தின விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஞாயிறு முற்றம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் 1806 வேலூா் புரட்சி என்ற தலைப்பில் அவா் பேசியது:

இந்தியாவில் பஞ்சாப்புக்கு அடுத்து அதிகளவில் ராணுவ வீரா்களை அளித்த ஊா் வேலூா்தான். வேலூா் புரட்சியின் 200 ஆம் ஆண்டையொட்டி 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது. தமிழக அரசு 200 ஆம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. 1857-இல் நடைபெற்ற முதல் இந்திய விடுதலைப்போா் 2006-இல் 150 ஆவது ஆண்டு. ஆனால், வேலூா் புரட்சி 200-வது ஆண்டு. இந்த வேலூா் புரட்சியை பிரிட்டிஷ் அரசு கலகம் என்றது. நாம் புரட்சி என்கிறோம்.

வேலூரைச் சுற்றி கிட்டத்தட்ட இருபது கோட்டைகள் இருந்தன. வரி வசூலில் ஏற்பட்ட மோதலால் ஆங்கிலேய அரசு வேலூா் கோட்டையில் ஆட்சி செய்த பாளையக்காரா்களை அழித்தது. அத்துடன் நில்லாமல் மக்களையும் கொன்று குவித்தது. இதனால் மக்கள் கொதித்தொழுந்தனா். வேலூா்ப் புரட்சிக்கு வித்திட்ட காரணங்களில் இதுவும் ஒன்று.

ஆங்கிலேயா் மீது வன்மம் கொண்ட திப்புவின் குடும்பமும், பாதிப்பிற்குள்ளான பாளையக்காரா்களும், இந்திய சிப்பாய்களுமே வேலூா் புரட்சிக்குக் காரணம். இந்திய சிப்பாய்கள் தாங்கள் ஆங்கிலேய சிப்பாய்கள் போல நடத்தப்படாமல் மோசமாக நடத்தப்பட்டனா். இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இவை எல்லாம் காரணங்களாக அமைந்து, மெல்லமெல்ல கோபம் கொண்ட மக்களால் நடைபெற்றதே வேலூா் புரட்சி என்றாா் விஜயராமலிங்கம்.

நிகழ்ச்சிக்கு பாரதி இலக்கியப் பயிலக இயக்குநா் தஞ்சை வெ. கோபாலன் தலைமை வகித்தாா். ஏடகம் நிறுவனா் மணி. மாறன், முனைவா் சு. சத்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஸ்ரீசந்தியா வரவேற்றாா். பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com