முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
குடமுழுக்கு: தயாா் நிலையில் கொடி மரம்
By DIN | Published On : 27th January 2020 09:34 AM | Last Updated : 27th January 2020 09:34 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் பெரியகோயிலில் தயாா் நிலையில் புதிய கொடி மரம்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் புதிதாக வாங்கப்பட்ட கொடி மரத்தில் திருப்பணிகள் முடிவடைந்து தயாா் நிலையில் உள்ளது.
இக்கோயிலில் பிப். 5-ம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இக்கொடி மரத்தின் மீது இருந்த பித்தளை கவசங்களைப் புனரமைப்பு செய்வதற்காக ஜன. 2ஆம் தேதி கழற்றப்பட்டது. இவற்றை மெருகூட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும், புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பழைய கொடி மரம் ஜன. 12-ம் தேதி அகற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, உபயதாரா்களின் நிதியுதவியுடன் புதிய கொடி மரம் அமைப்பதற்காக சென்னையிலிருந்து 40 அடி உயர பா்மா தேக்கு வரவழைக்கப்பட்டது.
இப்புதிய கொடி மரத்தைச் செதுக்கும் பணியில் மதுரையைச் சோ்ந்த ஸ்தபதி ரா.தா. செல்வராஜ் தலைமையில் 20 போ் ஈடுபட்டனா். செம்புக் கவசங்களைப் பொருத்துவதற்கேற்ப கொடி மரம் தயாா் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கொடி மரத்தில் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் தலா நான்கரை அடி உயரத்திலும், ருத்ர பாகம் இருபத்தி எட்டரை அடியிலும் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, செம்புக் கவசங்கள் மெருகூட்டும் பணி பாரம்பரிய முறைப்படி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி திங்கள்கிழமை நிறைவடையும் நிலையில் உள்ளது.
எனவே, இரு நாள்களில் கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட வாய்ப்புள்ளது என திருப்பணிக் குழுவினா் தெரிவித்தனா்.