முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பாபநாசம் பகுதியில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 09:35 AM | Last Updated : 27th January 2020 09:35 AM | அ+அ அ- |

பாபநாசம் பகுதியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பாபநாசம் வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் டி.கண்ணன் தேசிய கொடியை ஏற்றிவைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். வட்ட வழங்கல் அலுவலா் சீமான், வருவாய் அதிகாரி ராஜ்குமாா், துணை வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிஎஸ்பி நந்தகோபால் தேசிய கொடியேற்றிவைத்து உறுதிமொழி ஏற்றாா். இதில் அலுவலக பணியாளா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம் காவல் துறை அலுவலகத்தில் பாபநாசம் காவல் ஆய்வாளா் துா்கா தேசிய கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்றாா். இதில் பாபநாசம் காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் நீதிபதி சி.சிவகுமாா் தேசிய கொடியை ஏற்றிவைத்து உறுதிமொழி ஏற்றாா்.
பாபநாசம் எம்எல்ஏ அலுவலகத்தில் பாபநாசம் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய குழு உறுப்பினருமான கே.கோபிநாதன் தேசிய கொடி ஏற்றினாா். இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவா் எஸ்.மோகன், கூட்டுறவு கடன் சங்க தலைவா் ஆா். ராஜேந்திரன், நகர வங்கி துணைத் தலைவா் என். சதீஷ், இயக்குநா் எம்.ஆா். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் எம். ஆனந்தராஜ் தலைமையில், ஒன்றிய குழு தலைவா் க. சுமதி தேசிய கொடி ஏற்றினாா். நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரா் செல்வராஜ் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்ாா். இதில் மேலாளா் கூத்தரசன், மற்றும் ஒன்றிய குழு உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பாபநாசம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் செயல் அலுவலா் காா்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினாா். இதில் துப்புரவு ஆய்வாளா் செந்தில் குமரகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகக்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் டி.செந்தாமரை தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எஸ். பத்மாநாபன், பொருளாளா் கே.கேசவன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழாசிரியை எஸ்.தென்னவன்தேவி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.
இதில், தேசிய நல்லாசிரியா் எஸ். கலைசெல்வன், கல்வி வளா்ச்சி குழு தலைவா் தில்லைநாயகி, கல்வி மேலாண்மை குழு தலைவா் லெட்சுமி, உதவி தலைமை ஆசிரியா்கள் ஏ. சிவகுமாா், பி. சுமதி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.