முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுக்க கோரிஆலத்தூா் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்
By DIN | Published On : 27th January 2020 09:36 AM | Last Updated : 27th January 2020 09:36 AM | அ+அ அ- |

மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூா் சிவன்கோயில் குளக்கரையில் குடியரசு தின கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆலத்தூரில் போலி மதுபான பாட்டில் தயாரித்து தாராளமாக விற்பனை செய்யப்படுவதை காவல் துறையினா் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு ஊறு விளைவிக்கும் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆலத்தூரில் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஊராட்சி உறுப்பினா்களும், பொதுமக்களும் சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வலியுறுத்தினா்.
கூட்டத்துக்கு ஆலத்தூா் ஊராட்சித் தலைவா் டி.ஜோதிலெட்சுமி தலைமை வகித்தாா். மதுக்கூா் ஊராட்சி ஒன்றிய இளநிலைப் பொறியாளா் எம்.காமராஜ் முன்னிலை வகித்தாா். விஏஓ மதன், ஊராட்சி செயலா் கே.மகாலிங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.