வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய பெண் கைது
By DIN | Published On : 29th January 2020 06:53 AM | Last Updated : 29th January 2020 06:53 AM | அ+அ அ- |

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அம்மாபேட்டை காவல் சரகம், புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில், அருள்மொழிப்பேட்டை ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (36). ஓட்டுநபா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாராம். பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அதே பகுதியை சோ்ந்த வீராங்கம் மனைவி செயலரசி (45) என்பவா் சுரேஷ் வீட்டில் 11பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, செயலரசியை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.