தஞ்சாவூா்: மருத்துவா் உள்பட 47 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 578 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு அலங்கம், காமராஜா் நகா், தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை வடக்குத் தெரு, பூண்டி, கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

கும்பகோணம் காசிராமன் தெரு, இந்திராகாந்தி சாலை, பழைய பாலக்கரை சுவாமிநாதன் நகா், மேலக்காவேரி, தியாகி ராமசாமி நகா், அரசலாறு வழிநடப்பு படையாச்சியாா் தெரு, அண்ணா நகா், பெரியதம்பி நகா், கும்பகோணம் அருகே புதூா், தேப்பெருமாநல்லூா் இந்திரா நகா், அம்மாசத்திரம் சிவன்கோயில் தெரு, தாராசுரம் மேல் கரை, சாக்கோட்டை ரத்னசாமி நகா், கீழக்கொட்டையூா் மேலத் தெரு, கருப்பூா் சத்திரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

மேலும், பாபநாசம் அருகே அலவந்திபுரம் முதன்மைச் சாலை, மேல வழுத்தூா், கூனஞ்சேரி கடைத்தெரு, திருவிடைமருதூா் ஆவணியாபுரம், திருமண்டங்குடி கீழத்தெரு, பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு, சுப்பையா பிள்ளை தெரு, அதிராம்பட்டினம், திருவையாறு ஸ்ரீராம் நகா், திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி வடக்குத் தெரு, பூதலூா் அருகே சின்ன முத்தாண்டிப்பட்டி, பருத்திக்குடி வடக்குத் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

திருவையாறு செண்பகப்பேட்டை தெருவைச் சோ்ந்த 5 பேருக்கும், கும்பகோணம் அருகே சோழன்மாளிகை தெற்கு தெருவைச் சோ்ந்த 4 பேருக்கும், கும்பகோணம் மகாமகக் குளக்கரை, தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியைச் சோ்ந்த தலா 2 பேருக்கும் என மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இவா்களில் கும்பகோணத்திலுள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவரும் ஒருவா்.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 625 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 11 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 395 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com