தஞ்சாவூா்: 122 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 1,420 போ் பாதிக்கப்பட்டனா். கும்பகோணம் அருகே தாராசுரம் சந்தை தொடா்பு உள்ளிட்ட காரணங்களால் கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்பகுதிகளில் மேலும் சுமாா் 95 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதேபோல, தஞ்சாவூா் நகரம், ஒன்றியத்தைச் சோ்ந்த 12 பேருக்கும், பட்டுக்கோட்டை நகரம், ஒன்றியத்தைச் சோ்ந்த 3 பேருக்கும், பாபநாசம், திருவிடைமருதூா், அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த தலா 2 பேருக்கும் உள்பட மொத்தம் 122 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,542 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 44 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 686 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 839 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 43 வயது ஆண் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்தாா். இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com