10 ஆண்டுகளாகத் தண்ணீர் வராத வாய்க்கால்: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அருகேயுள்ள வாய்க்காலில் 10 ஆண்டுகளாகத் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
10 ஆண்டுகளாகத் தண்ணீர் வராத வாய்க்கால்: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் அருகேயுள்ள வாய்க்காலில் 10 ஆண்டுகளாகத் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தியில்  காவிரி வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட குடமுருட்டி ஆற்றிலிருந்து திருத்துக்கால் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால், 1,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவுக்கு நேரிடையாகப் பாசன வசதி பெறுவதற்கும், நிலத்தடி நீர்மட்டத்தைச் செறிவூட்டுவதற்கும் பயன்பட்டு வந்தது. 

இந்த வாய்க்காலில் 70 சதவீதம் பல வகைகளில் ஆக்கிரமிப்பில் உள்ளது. 

இதனால் இந்த வாய்க்காலில் 10 ஆண்டுகளாக நீரோட்டம் தடைபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அப்பகுதி விவசாயிகள் 2011 ஆம் ஆண்டு முதல் மனு அளித்து வருகின்றனர் ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.  

மேலும் பேரூராட்சிப் பகுதியில் உள்ள பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களிலும் தூர் வாரப்படவில்லை.

 எனவே, திருத்துக்கால் வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஊரகப்பகுதிகளில் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களைச் சீரமைப்பது போல், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியிலும் பி மற்றும் சி பிரிவு வாய்க்கால்களைச் சீரமைக்க வலியுறுத்தியும் கண்டியூர் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத் துணைத் தலைவர் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் தலைமையில் பலர் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com