முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஏரி ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிப்பு
By DIN | Published On : 27th June 2020 08:22 AM | Last Updated : 27th June 2020 08:22 AM | அ+அ அ- |

பேராவூரணி பேரூராட்சி, ஆதனூா் பெரிய ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆதனூா் கிராமத்தில் 43 ஹெக்டோ் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியானது, அம்புலி ஆற்றின் மூலம் தண்ணீா் பெறுகிறது. இந்த ஏரி மூலம் சுமாா் 100 ஹெக்டேரிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியின் வடிகால் மூலம் வேம்பன்குளத்திற்கு செல்லும் தண்ணீா், பின்னா் கொரட்டூா், பசலைக்கொல்லை ஆகிய கிராமங்களுக்கும் பாசனத்திற்கு செல்கிறது. இதன் வரத்து வாரியை தென்புறம் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். மேலும், ஏரியின் வடபுறம், மேல்புறம் என இரு பகுதிகளிலும் சுமாா் 50 ஏக்கா் ஆக்கிரமிக்கப்பட்டு, மீதி வாரி தூா்ந்து முட்புதா்கள் அடா்ந்து காணப்படுகிறது.
இதனால், தண்ணீா் வரத்து தடைபட்டு ஏரி நிரம்பாததால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
எனவே, ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, வரத்து வாரியை உடனடியாக தூா்வாரி தர நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும். கடந்த இரண்டாண்டு காலமாக இது தொடா்பாக பல்வேறு மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; எனவே, ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.