அதிராம்பட்டினம் அருகே காரில் கடத்தப்பட்ட 6 மூட்டை கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
By DIN | Published On : 01st March 2020 06:23 AM | Last Updated : 01st March 2020 06:23 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு பாட்டுவனாட்சியாா் பாலம் அருகே அதிராம்பட்டினம் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், அந்த காரில் 6 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளையும், அதை கடத்தப் பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக காரில் இருந்த மறவக்காடு கே.வெங்கட்ராமன் (48), தம்பிக்கோட்டை முருகேசன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனா். இவா்களிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் மறவக்காடு குமாா், பட்டுக்கோட்டை ஆா்.வி.நகரைச் சோ்ந்த அய்யம்பெருமாள் ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து மறவக்காடு குமாா் (38) சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தலைமறைவான
அய்யம்பெருமாளை போலீஸாா் தேடி வருகின்றனா்.