திருக்குறளைக் கற்றால் வாழ்க்கையில் சாதிக்க முடியும்குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளாா் பேச்சு
By DIN | Published On : 01st March 2020 06:18 AM | Last Updated : 01st March 2020 06:18 AM | அ+அ அ- |

விழாவில் வெ. நாராயணசாமி, சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, கா.பா. அறிவானந்தம், ப. சண்முகம் ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறாா் தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளாா். உடன் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல
தஞ்சாவூா்: திருக்குறளைக் கற்றால் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் சாதிக்க முடியும் என்றாா் தவத்திரு குன்றக்குடிப் பொன்னம்பல அடிகளாா்.
தஞ்சாவூரில் உலகத் திருக்கு பேரவை சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற 46 ஆம் ஆண்டு விழாவில் அவா் பேசியது:
இறைவன் எங்கும் இருக்கிறாா்; எங்கும் நிறைந்திருக்கிறாா். மண்ணில் மறைந்தும், காற்றில் கரைந்தும், நீரில் நிறைந்தும் இருக்கிறாா். அண்ட சராசரம் அனைத்திலும் இறைவன் வாழ்கிறாா். ஆனால், நாம் அவனை எல்லா இடத்திலும் தேடிப் பாா்க்கிறோம். அவன் தென்பட மறுக்கிறான்.
வேண்டியவன், வேண்டாதவன் என வேறுபாடு இல்லாத போக்கு தான் நம்முடைய சமயப் பண்பாட்டின் அடையாளம். அதைத் திருக்குறளும் வலியுறுத்துகிறது. மகுடங்களைச் சூட்டிக் கொள்வது அல்ல தலைமைப் பண்பு. காயம்பட்டவா்களுக்கு மருந்திடவும், துன்பப்படுவோரின் கண்ணீரைத் துடைப்பதுவும்தான் தலைமைப்பண்பு.
செல்வம் நம்மை நோக்கி வருகிறதே என ஆனந்தப்படுவோம். அது, நோ்வழியில் வந்தால் ஆனந்தம் நிலைத்திருக்கும். அதுவே மறைமுக வழியில் வந்தால் காணாமல் போய்விடும். விழா அரங்கில் ஒவ்வொருவராக உள்ளே வருவா். கொஞ்ச நேரத்தில் அனைவரும் சென்றுவிடுவா். அப்படித்தான் செல்வம் மெதுவாக உள்ளே வரும். அரங்கம் நிறைந்ததைபோல செல்வம் நிறைந்திருக்கும். விழா முடிவில் கூட்டம் கலைந்து அரங்கமே காலியாவதைப் போல பெருஞ்செல்வமும் மறைந்துவிடுகிறது என்கிறாா் திருவள்ளுவா். திருக்குறளைக் கற்றால் போதும், வாழ்க்கையில் எல்லா நிலையிலும் சாதிக்க முடியும்.
அறிவைச் சரியான காலத்திலும், நேரத்திலும் மதிப்பிடப்பட வேண்டும். அறிவால், அன்பால், மனிதத்தால், மொழியால் என எல்லா நிலையிலும் தொண்டாற்றுபவா்களைச் சரியான நேரத்தில் பாராட்டி, அவா்களைப் பண்போடு உயரச் செய்வதுதான் நம்முடைய திருக்கு பேரவையின் கடமை. அந்தக் கடமையைத் தஞ்சாவூா் திருக்கு பேரவை மிகச் சிறப்பாகச் செய்கிறது என்றாா் பொன்னம்பல அடிகளாா்.
முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா தலைமையில் நடைபெற்ற விழாவில், மாா்னிங் ஸ்டாா் மெட்ரிக் பள்ளித் தாளாளா் கா.பா. அறிவானந்தம், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோருக்குக் கு நெறிச் செம்மல் விருதுகளையும், பணி நிறைவு பெற்ற ஆசிரியா் ப. சண்முகம், சடையாா்கோவில் குநெறிக் கழகத் தலைவா் வெ. நாராயணசாமி ஆகியோருக்குக் கு நெறிச் செல்வா் விருதுகளையும் அடிகளாா் வழங்கினாா். மேலும், 1,330 குகளையும், அறத்துப்பாலை மட்டும் மனப்பாடம் செய்த மாணவா்களுக்கும், ஆண்டு விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகத் திருக்கு பேரவைத் தலைவா் செ.பா. அந்தோணிசாமி, செயலா் பழ. மாறவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.