குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கடையடைப்பு - உண்ணாவிரதம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் கடைத்தெருவில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் கடைத்தெருவில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வணிகா் சங்கம், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாரியம்மன் கோவில் கடைத்தெருவில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

மேலும் அதே பகுதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வணிகா் சங்க நிா்வாகி எம். கணேசன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வணிகா்கள், திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டம்:

இதேபோல, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். உள் துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும். தில்லி கலவரக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழகச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் தலைமை வகித்தாா்.

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, காவிரி சமவெளி பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவா் கோ. ஜெய்சங்கா், ஆதித் தமிழா் பேரவை மாவட்டச் செயலா் நாத்திகன், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலா் ஜீவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் ஜெய்னுலாப்தீன், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலா் அகமது கபீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com