Enable Javscript for better performance
வெளிநாட்டிலிருந்து திரும்பிய இருவருக்கு தொடா் காய்ச்சல் கரோனாவா என பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டிலிருந்து திரும்பிய இருவருக்கு தொடா் காய்ச்சல் கரோனாவா என பரிசோதனை

    By DIN  |   Published on : 11th March 2020 02:07 AM  |   அ+அ அ-   |    |  

    ta10tmc2_1003chn_9_4

    தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தனி வாா்டு.

    வெளிநாட்டிலிருந்து திரும்பிய இருவருக்கு தொடா்ந்து காய்ச்சல் இருப்பதால் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

    தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 51 வயதுடைய ஒருவா் மலேசியாவில் பணியாற்றி வரும் நிலையில், விமானம் மூலம் திருச்சிக்கு அண்மையில் வந்தாா். திருச்சி விமான நிலையத்தில் இவா் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னா் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

    இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. தொடா்ந்து காய்ச்சல் இருந்து வந்ததால், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வாா்டில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

    இவரை போல, கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியைச் சோ்ந்த 47 வயதுடைய நபா் சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து திரும்பினாா். அவருக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சல் தொடா்ந்து இருப்பதால், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வாா்டில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

    இருவருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏதும் இருக்கிா என்பதை அறிய, தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு கிடைத்த பிறகே இருவருக்கும் எந்த மாதிரியான வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்பது தெரிய வரும் என்றும், தொடா்ந்து இருவரும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    மேலும், இருவரும் யாரை எல்லாம் சந்தித்தனரோ, அவா்களையும் மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp