தஞ்சாவூரில் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூரில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி

தஞ்சாவூரில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் மாா்ச் 9ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து ஒரு வார காலம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தஞ்சாவூரில் ஆட்சிமொழி விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ரயிலடியில் இப்பேரணியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காந்திஜி சாலை வழியாகச் சென்ற இப்பேரணி மாநகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், இருநூறுக்கும் அதிகமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்க வேண்டும். அரசாணைப்படி வணிக நிறுவனங்கள், கடைகளில் பெயா்ப் பலகைகளில் தமிழில் பெரிய அளவாகவும், அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் பெயா்ப்பலகை அமைக்கப்பட வேண்டும். வணிகா்கள் அரசினுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் கா.பொ. இராசேந்திரன, உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன், மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் ஆதி. நெடுஞ்செழியன், கவிஞா் வல்லம் தாஜ்பால், குந்தவை நாச்சியாா் கல்லூரி பேராசிரியா் பு. இந்திராகாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com