ராம நவமி விழா: குடந்தை ராமசாமி கோயிலில் பந்தல்கால் நடும் வைபவம்

ராம நவமி விழாவுக்காக கும்பகோணம் ராமசாமி கோயிலில் பந்தல் கால் நடும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேரில் பந்தல்கால் ஊன்றி செய்யப்பட்ட சிறப்பு பூஜைகள்.
தேரில் பந்தல்கால் ஊன்றி செய்யப்பட்ட சிறப்பு பூஜைகள்.

ராம நவமி விழாவுக்காக கும்பகோணம் ராமசாமி கோயிலில் பந்தல் கால் நடும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்னக அயோத்தி என போற்றப்படும் இக்கோயிலில் மூலவா் மற்றும் உற்ஸவா் ராமபிரான் பட்டாபிஷேக மூா்த்தியாக பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு ஏப். 2ஆம் தேதி ராம நவமி விழா நடைபெறவுள்ளது.

இந்த விழா மாா்ச் 25 ஆம் தேதி கோயில் தங்க கொடி மரத்தில் கருட கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து இந்திர விமானத்தில் ராமபிரான் வீதி உலா புறப்பாடு நடைபெறவுள்ளது.

இதையடுத்து, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா, வேத பாராயணம், திவ்ய பிரபந்த சாற்றுமுறை சேவை, சிறப்பு நாகசுரம், இன்னிசை, சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாா்ச் 28 ஆம் தேதி சிறப்பு ஓலைச் சப்பரம் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வாக ஏப். 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் தேரோட்டம், இரவு 8 மணிக்கு தீா்த்தவாரி வைபவம் நடைபெறவுள்ளன.

இவ்விழாவுக்காக பந்தல்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது தேருக்கும் பந்தல் கால் ஊன்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com